×

வடசென்னை பகுதியில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்த 55 வயது பெண்ணுக்கு கடந்த 2ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

* கொளத்தூர் ஹரிதாஸ் சாலையை சேர்ந்த 79 வயது நபர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினால் கடந்த 25ம் தேதி தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நேர்மை நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

* தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் முத்தமிழ் நகர் வடக்கு அவென்யூ சாலையை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.இறந்தவரின் அப்பா, அம்மா இருவரும் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த நபருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

* கொடுங்கையூர் விவேகானந்தா நகர் சஞ்சய் காந்தி தெருவை சேர்ந்த 56 வயது நபருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த 3ம் தேதி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், அன்று இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.

* வியாசர்பாடி புதிய காமராஜர் நகரை சேர்ந்த 72 வயது முதியவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த மாதம் 30ம் தேதி கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரதுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது 1ம் தேதி தெரியவந்தது. இவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் திருவிக நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்டான்லியில் 2 பேர் உயிரிழப்பு
வண்ணாரப்பேட்டை  சிமின்ட்ரி சாலையை சேர்ந்த 55 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக கடந்த 31ம்  தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர், நேற்று காலை  சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதேபோல், திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு  கிராமத்தை சேர்ந்த 42 வயது ஆண் கடந்த 24ம் தேதி கொரோனா தொற்று காரணமாக   ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று  வந்த அவர், நேற்று அதிகாலை இறந்தார்.

297 பேருக்கு நோய் தொற்று
திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட செம்பியம்  பன்னீர்செல்வம் 3வது தெருவில் அப்பா, மகன், வியாசர்பாடி கருணாநிதி சாலையில் கல்லூரி மாணவன், திருவிக நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 பேர், பேசின் பிரிட்ஜ் பகுதியில் 2 பேர், ஓட்டேரி பனந்தோப்பு ரயில்வே காலனியில் 54 வயது ரயில்வே ஊழியர், ஸ்டாரன்ஸ் ரோடு, ஹைதர் கார்டன் வடக்கு அவன்யூ ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், அயனாவரம் மதுரை தெருவில் ஒருவர், பில்கிளின்டன் சாலையில் 24 வயது காவலர், புளியந்தோப்பில் 6 பேர் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

* ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட மண்ணடி,  முத்தியால்பேட்டை, யானைகவுனி, சவுகார்பேட்டை, கொத்தவால்சாவடி,  வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 149  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
* தண்டையார்பேட்டை  மண்டலத்துக்கு உட்பட்ட வியாசர்பாடி, கொடுங்கையூர், புது வண்ணாரப்பேட்டை,  தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் 93  பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.



Tags : region ,Northcentral ,Corona , Northcentral .region. 5 killed .Corona
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!