யானையை வெடிவைத்து கொன்றவருக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்து காட்டு யானை ஒன்று பசியுடன் ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் தெருவில் சுற்றிய கருவுற்றிருந்த அந்த யானைக்கு அன்னாச்சி பழத்தில் வெடிமருந்தை வைத்து சில மனித மிருகங்கள் கொடுத்துள்ளன. அதனை அந்த யானை சாப்பிட்ட போது, அதன் வாயிலேயே வெடிமருந்து வெடித்து பரிதாபமாக உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

Advertising
Advertising

இந்த சம்பவம் மனிதாபிமானத்துக்கு ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கொரோனா போன்ற பல வைரஸ்கள் பரவி மனித இனம் அழிந்து வருவது, இதுபோன்ற சம்பவங்களின் பிரதிப்பலிப்பாகத் தான் பார்க்கிறேன். யானையை வெடிவைத்து கொன்ற அந்த மர்மநபர்கள் யார் என்பது குறித்து கேரள அரசு கண்டறிந்து, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டும். காட்டு யானையை கொன்றது ஒட்டு மொத்த மக்களுக்கும் மன வேதனையை உண்டாக்கியுள்ளது.

Related Stories: