பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 45 அடியாக உயர்வு

நாகர்கோவில்:  குமரி மாவட்டத்தில் தொடர்ந்து  மழை பெய்து வரும் நிலையில் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 45 அடியாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை வரை விடிய விடிய மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்திருந்தது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 37.50 அடியாக இருந்தது. அணைக்கு 711 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 44.75 அடியாகும். அணைக்கு 442 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 13.51 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 106 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 13.61 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 149 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 14.70 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 47.82 அடியும் நீர்மட்டம் காணப்பட்டது.  முக்கடல் அணையில் 2.5 அடியாக நீர்மட்டம் உள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணை பகுதியில் 13 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

குழித்துறை சப்பாத்து பாலம் மூழ்கியது

மார்த்தாண்டம்: குமரி  மாவட்டத்தில்  ெபய்து வரும் மழையால் ஆறுகள் கரைபுரண்டு  ஓடுகின்றன. ேகாதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் திற்பரப்பு அருவி  ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும்  நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் குழித்துறை சப்பாத்து பாலத்தை  மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி  அளிக்கிறது. பொதுமக்கள் பலரும் இந்த சப்பாத்து பாலம் வழியாக நடந்தும்,  வாகனங்களிலும் சென்று வந்தனர். பாலம் மூழ்கியதை அடுத்து பொதுமக்களின்  பாதுகாப்பு கருதி, இந்த வழியாக வாகனங்களில் செல்ல  முடியாதவாறு அதிகாரிகள்  சப்பாத்து பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு  வைத்து அடைத்துள்ளனர்.

சிற்றார்-1    : 10

பேச்சிப்பாறை : 10

சிற்றார்-2    : 12

களியல்    : 5.6

குளச்சல்    : 12.6

இரணியல்    : 8.4

பாலமோர்    : 12.4

மாம்பழத்துறையாறு    : 13

கோழிப்போர்விளை    : 8

முள்ளங்கினாவிளை    : 8

அடையாமடை    : 8

ஆனைக்கிடங்கு    : 14.6

Related Stories: