குற்ற சம்பவங்களுக்கு உடந்தை சிறப்பு பிரிவு போலீஸ்காரர் அதிரடி சஸ்பெண்ட்

பெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் உள்ளது. இங்கு சிறப்பு பிரிவு காவலராக நாகராஜ் என்பவர் பணியாற்றி வந்தார்.

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய கட்டுபாட்டில் கஞ்சா விற்பனை, காட்டன் சூதாட்டம், கள்ள சந்தையில் மது விற்பனை, மணல், மண் கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதுதொடர்பாக, மாவட்ட எஸ்பிக்கு புகார்கள் சென்றன.மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒருசில சிறப்பு பிரிவு போலீசார், குற்ற சம்பவங்களுக்கு துணை போவதாக கூறப்பட்டது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பிரிவு போலீஸ்காரர் நாகராஜ் உள்பட சிலர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய சிறப்பு பிரிவு போலீஸ்காரர் நாகராஜை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் மணிமாறன். இவர், காவல் நிலையத்துக்கு புகார்கள் கொடுக்க வரும் மக்களை ஒருமையில் பேசுவதாக கூறப்படுகிறது.மேலும், காவல் நிலைய கட்டுபாட்டில் உள்ள பகுதிகளில் மணல் கொள்ளை சம்வங்கள் அதிகமாக நடக்கிறது. இதற்கு இன்ஸ்பெக்டர் மற்றும் ஒருசில காவலர்கள் உடந்தையாக உள்ளனர் என ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி கார்த்திகேயனிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: