×

கட்டிட மேஸ்திரியிடம் 81 ஆயிரம் வழிப்பறி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் மேகநாதன் (40). கட்டிட மேஸ்திரி. நேற்று மதியம் மேகநாதன், தனது மனைவி, மருமகளுடன் காஞ்சிபுரம் சங்கரமடம் இந்தியன் வங்கி கிளைக்கு சென்றார். அங்கு, நகையை அடகு வைத்து ₹81 ஆயிரம் பெற்று கொண்டு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார்.

காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை சந்திப்பில் சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த 2 வாலிபர்கள், மேகநாதனின் மருமகள் வைத்திருந்த பணப்பையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அலறி கூச்சலிட்டனா். ஆனால் எந்த பலனும் இல்லை. புகாரின்படி சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து,  விசாரிக்கின்றனர்.Tags : Architect. ,Architect , 81 Thousand,Architect
× RELATED சென்னையிலிருந்து மாற்று வழிகளில்...