காஞ்சிபுரம்: முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாளை 6 இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை யொட்டி நாளை (6ம் தேதி) மாலை 4 மணிக்கு பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மான்போர்டு பள்ளி வளாகம், மாலை 4.30 மணிக்கு குரோம்பேட்டை வசந்தம் திருமண மண்டபம் அருகில், 5 மணிக்கு கிழக்கு தாம்பரம், பாத்திமா தேவாலய வளாகம்.
மாலை 5.30 மணிக்கு, மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகில், 6.15 மணிக்கு செங்கல்பட்டு தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளி வளாகம், இரவு 7 மணிக்கு திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகில் என 6 இடங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.