×

கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாளை திமுக சார்பில் 6 இடங்களில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிக்கை

காஞ்சிபுரம்: முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாளை  6 இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை யொட்டி நாளை (6ம் தேதி) மாலை 4 மணிக்கு பரங்கிமலை கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மான்போர்டு பள்ளி வளாகம், மாலை 4.30 மணிக்கு குரோம்பேட்டை வசந்தம் திருமண மண்டபம் அருகில், 5 மணிக்கு கிழக்கு தாம்பரம், பாத்திமா தேவாலய வளாகம்.
மாலை 5.30 மணிக்கு, மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகில், 6.15 மணிக்கு செங்கல்பட்டு தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளி வளாகம், இரவு 7 மணிக்கு திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகில் என 6 இடங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, 3 சக்கர வாகனம், அரிசி, மளிகை பொருட்கள் உள்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.நிகழ்ச்சிகளில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், எஸ்.அரவிந்த ரமேஷ், செந்தில் இதயவர்மன் உள்பட பலர்  கலந்து கொள்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.



Tags : places ,Birthday ,DMK ,District Secretary ,Karunanidhi ,TMO Anbarasan Tomorrow , Tomorrow ,Karunanidhi,birthday,behalf ,DMK
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...