கொரோனாவால் இறந்த முதியவரின் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த மானாம்பதியை சேர்ந்த 77 வயது முதியவர், உடல்நலக்குறைவால் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.இதையடுத்து அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், முதியவரின்  மனைவி, மருமகள், 2 பேரன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தேபோன்று கோவளம் மற்றும் பையனூரில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: