×

சென்னை, வேலூரில் 104 டிகிரி வெயில்

சென்னை: அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல் மும்பை அருகே நேற்று முன்தினம் கரையைக் கடந்தது. அதனால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டதால் தற்போது தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக வெப்ப சலனம் ஏற்பட்டு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தேவாலாவில் 30 மிமீ மழை பெய்துள்ளது.

தேக்கடி 20மிமீ, குளச்சல், பெரியாறு, நடுவட்டம், வால்பாறை, பேச்சிப்பாறை, சின்னக் கல்லார், இரணியல், பவானி 10 மிமீ மழை பெய்துள்ளது. இதையடுத்து நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

Tags : Vellore ,Chennai , Vellore, Chennai, Weapon 104, degrees
× RELATED வேலூரில் ஒரு மருந்தகத்திற்கு வந்து...