×

சென்னை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் பலி

சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.சென்னையில் மட்டும் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை என 4 மருத்துவ மனைகளில் ெகாரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.பலர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக ஏற்கனவே பல்வேறு பாதிப்புகளுடன் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விடுகின்றனர். சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட உடனே மரணம் அடைந்து விடுகின்றனர். இவ்வாறு தினசரி சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து விடுகின்றனர்.
 
இதன்படி கடந்த மாதம் ெசன்னையில் மட்டும் 500க்கு மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதைப்போன்று ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 55 வயது பெண், திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு பகுதியை சேர்ந்த 42 வயது ஆண்  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேரும் உயிரிழந்துள்ளனர். அதைப்போன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும் கடந்த 26ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 87 வயது முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவர்களின் உடல்களையும் பாதுகாப்பாக அடக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடர்ந்து இறப்பதால் பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.Tags : Chennai ,hospitals ,hospital , receiving ,treatment,Chennai hospitals,killed
× RELATED சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு...