×

ஊரடங்கின்போது டிக்கெட் முன்பதிவு பயணிகளுக்கு கட்டணத்தொகை ரூ.1,885 கோடி திரும்ப வழங்கப்பட்டது: ரயில்வே தகவல்

புதுடெல்லி:  ஊரடங்கு காலத்தின்போது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணம் ரூ.1,885 கோடி திரும்ப வழங்கப்பட்டுவிட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் இறுதி முதல் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 22ம் தேதி முதலே பயணிகள் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மார்ச் 21ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ரயில்களில் பயணிப்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து, ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

இதன்படி பயணிகள் முன்பதிவு கட்டணம் தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிக அளவிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் மிகப்பெரிய தொகையை  ரயில் பயணிகளுக்கு திரும்பி செலுத்தும் சவாலை ரயில்வே எதிர்கொண்டது. ஆனால் முன்பதிவு கட்டணத்தொகை ரூ.1,885 கோடியை பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் வெற்றிகரமாக திரும்ப வழங்கியுள்ளது. மார்ச் 21ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலமாக கட்டணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தபோது எந்த வங்கி கணக்கில் இருந்து செலுத்தினார்களோ அந்த வங்கிக் கணக்கிற்கு கட்டணத் தொகை அனுப்பப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : passengers ,curfew , Rs 1,885 crore ,refund, passengers booked,curfew, Railway Information
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...