உதவிக்கு கிடைத்த அங்கீகாரம்!! : பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐநாவின் ஏழைகளுக்கான நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு!!!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியில் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

*மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.

*அவ்வகையில், மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார்.

*இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார். மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.

*இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது.

*இதை கேட்ட பிரதமர் மோடி, மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மகள் நேத்ரா ஐநாவின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு

*இந்நிலையில் மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.நேத்ராவை ஐ.நா-வின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான  (United Nations Association for Development and Peace) சார்பாக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

*மேலும் அவருடைய எதிர்காலத்திற்காக சுமார் ஒரு லட்ச ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மாநாட்டில் வறுமை ஒழிப்பு  தொடர்பாக பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

*தனது படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பு பற்றி பேசுவேன்

இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நேத்ரா, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி பேசுவேன் என்றார். அதனுடன்,சாதாரணமாக செய்த உதவிக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்பதையும் நேத்ரா பெருமிதத்துடன் தெரிவித்துக் கொண்டார்.

Related Stories: