×

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,48,456 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 10,21,80,599 அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,48,456 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய  5,82,877 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 5,44,566 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரூ. 10,21,80,599 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , 4,48,456 vehicles seized, violating , Tamil Nadu: Rs. 10,21,80,599, fines
× RELATED தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக...