மகாராஷ்டிராவில் பாதிப்பு 77,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.26 லட்சமாக உயர்வு; 6348 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,26,770 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9851 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 273 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6348 பேர் உயிரிழந்த நிலையில், 1,09,462 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2710 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 33,681 பேர்   குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 27,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை   220 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,902 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 25,004 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு,  650 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9898 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 1988 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 442 பேர் குணமடைந்தது.

பீகாரில் 4493 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 2210 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 301 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 214 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 756 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 213 பேர் குணமடைந்தது.

கோவாவில் 166 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 57 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 18,584 பேருக்கு பாதிப்பு; 1155 பேர் பலி; 12,667 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 3281 பேருக்கு பாதிப்பு; 24 பேர் பலி; 2134 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 644 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 173 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1588 பேருக்கு பாதிப்பு; 14 பேர் பலி; 690 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 9862 பேருக்கு பாதிப்பு; 213 பேர் பலி; 7104 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 793 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 354 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 90 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 48 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 124 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 33 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 13 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 17 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 2478 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 1416 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 82 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 2415 பேருக்கு பாதிப்பு; 47 பேர் பலி; 2043 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 1153 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 297 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 4320 பேருக்கு பாதிப்பு; 57 பேர் பலி; 1610 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 3142 பேருக்கு பாதிப்பு; 35 பேர் பலி; 1048 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 3147 பேருக்கு பாதிப்பு; 105 பேர் பலி; 1587 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 6876 பேருக்கு பாதிப்பு; 355 பேர் பலி; 2768 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 9237 பேருக்கு பாதிப்பு; 245 பேர் பலி; 5439 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 4223 பேருக்கு பாதிப்பு; 71 பேர் பலி; 2539 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 42 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 8762 பேருக்கு பாதிப்பு; 377 பேர் பலி; 5637 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 383 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 179 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.

தாதர் நகர் ஹவேலியில் 12 பேருக்கு பாதிப்பு; 1 குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.

சிக்கிமில் 2 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Related Stories: