×

இந்தியாவில இருந்து ஒண்ணல்ல... ரெண்டல்ல... மக்களே... பிஎஸ்எல்வி உட்பட 50 ராக்கெட்கள் விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது: ஊரடங்கு தளர்வால் நடவடிக்கை

திருமலை: கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக இஸ்ரோவில் இருந்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்எல்வி உட்பட 50 ராக்கெட்கள் விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. இஸ்ரோ தலைவர் டாக்டர்  சிவன் மூத்த விஞ்ஞானிகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை  நடத்தினார். இதில் வருங்காலத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ள செயற்கைக்கோள்கள், ஆராய்ச்சிகள்  குறித்தும் ஆலோசனை நடந்தது. பிஎஸ்எல்வி ராக்கெட் ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் விண்ணில் செலுத்தும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தை சேர்ந்த பல விஞ்ஞானிகள் 8ம் தேதி இஸ்ரோ வர உள்ளனர்.  விஞ்ஞானிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

போலார் சேட்டிலைட் ஏவுதள வாகனம் சி-49 (பிஎஸ்எல்வி) மற்றும் 50 ராக்கெட்கள் விண்ணில் செலுத்த  ஏற்கனவே  தயாராக உள்ளது. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கால் அவை அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்ட நிலையில் பல  சோதனைகளும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு ​​100 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு செல்லலாம் என  கட்டுப்பாடு நீக்கியுள்ளதால் தற்போது அனைவரும் பணிக்கு திரும்பி உள்ளனர். திருவனந்தபுரத்தில் இருந்து  விஞ்ஞானிகள் வந்த பிறகு பல்வேறு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களுக்கு பல்வேறு சோதனைகளை மேற்கொள்ளப்பட்டு விண்ணில் ஏவ தயார்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : BSLV , 50 rockets, including BSLV, ready,launch: curfew
× RELATED நாளை விண்ணில் பாய்வதாக இருந்த...