×

கேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்

கேரளாவில் கர்ப்பிணி யானையை  அன்னாசிப் பழத்தில் வெடி வைத்து கொன்றதற்கு சுனில் சேட்ரி உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சியையும், கோபத்தையும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுனில் சேட்ரி(கேப்டன், இந்திய கால்பந்து அணி): கருவுற்றிருந்த அந்த யானை யாருக்கும் தொல்லை தராமல் இருந் துள்ளது.  ஆனால் அரக்க குணம் படைத்த யாரோ இந்த ஈன செயலை செய்துள்ளனர். அதற்கான விலையை அவர்கள் கட்டாயம் பெறுவார்கள். தொடர்ந்து இயற்கையை பாதுகாப்பதில் நாம் தோற்று வருகிறோம். அப்படியிருக்கும் போது நாம் எப்படி ஆறறிவு பெற்றவர்கள் என்று எனக்கு விளக்குங்கள்.

விராட் கோஹ்லி (கேப் டன், இந்திய கிரிக்கெட் அணி): கேரளாவில் நடந்ததை கேட்கும் போது திகைப்பாக இருக்கிறது. நாம் விலங்குகளை அன்போடு நடத்துவோம். இதுப்போன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

சாய்னா நெயில்வால் (பேட்மின்டன் வீராங்கனை): இந்த சம்பவத்தை கேட்டத்தில் இருந்து வருத்தமாக இருக்கிறது.

உமேஷ் யாதவ்(கிரிக்கெட் வீரர்): கருவுற்றிருந்த யானைக்கு வெடிமருந்து நிரப்பிய அன்னாசிப் பழத்தை கொடுக்கும் செயலை ஒரு அரக்கனால் மட்டுமே செய்ய முடியும். அந்த கொடூர குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.Tags : Kerala , Elephant killing, Kerala shocked, angry
× RELATED மேட்டுப்பாளையத்தில் வாயில்...