×

வைரல் சம்பவம்

நன்றி குங்குமம் முத்தாரம்

இந்திய சமூகத்தில் திருமணம் என்பது முக்கிய பாரம்பரிய நிகழ்வு. இங்கே வருடத்துக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி திருமணங்கள் அரங்கேறுகின்றன.  உடைகள், நகைகள், விருந்தோம்பல், திருமண மண்டபம், மலர்கள், போக்குவரத்து, உணவு என ஒரு திருமணம் நடக்க ஏகப்பட்ட செலவுகள் செய்கின்றனர். இதனால் மறைமுகமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். வருடத்துக்கு 4 லட்சம் கோடி புரளுகின்ற ஒரு துறை திருமணம். இது இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் புரளும் தொகையைவிட அதிகம்.

இதுபோக இந்தியாவில் திருமணம் செய்தவர்கள் தேனிலவுக்காக பாலி, கிரேக்கத் தீவுகள், இத்தாலி என பல இடங்களுக்குச் செல்கின்றனர். இதனால் அந்த நாடுகளின் சுற்றுலாத்துறையும் வளர்கின்றன.  இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவின் திருமண நிகழ்விலும் பெரும் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. கோடீஸ்வரர்களும் குடிசையில் வாழ்பவர்களும் ஒரே மாதிரி திருமணம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோயிலில் கூட இல்லாமல் வீட்டுக்குள்ளேயே திருமணங்கள் அரங்கேறுகின்றன. இப்படி அரங்கேறிய பல திருமணங்கள் வைரல் சம்பவங்களாகிவிட்டன.

Tags : incident , Viral incident
× RELATED ஈடி அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம்...