மின்சார பராமரிப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா; சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகம் 7-ம் தேதி வரை தற்காலிகமாக மூடல்

சென்னை: சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகம் வரும் 7ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மின்சார பராமரிப்பு பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

விமானம் மூலம் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து யார் வந்தாலும், அவர்களுக்கு விமான நிலையத்தில் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட வேண்டும். அதன்பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இதனிடையே, வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத் மிஷன் நடவடிக்கையை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த பணியை ஏர் இந்தியா விமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதையடுத்து சர்வதேச விமான போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பணி புரிந்து வரும் ஊழியர்கள் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாளை முதல் வருகிற 7ஆம் தேதி வரை கிருமிநாசம் செய்யப்படுவதற்காக விமான நிலைய நிர்வாக அலுவலகம் மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories: