×

ஸ்டேடியம் அளவிலான ராட்சத விண்கல் உட்பட 6 விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்கிறது : நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை : 3 விண்கற்கள் இன்றும், நாளையும் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை அடையும் பொருளாகும். சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

அச்சமயம், விண்கல் வளிமண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிந்தபடியான பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சிலவற்று பூமியில் விழுந்து, நினைத்து பார்க்கமுடியா பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.

*அதன்படி, 24 முதல் 54 மீட்டர் விட்டமுள்ள, 2020 கே என் 5 என்று பெயரிடப்பட்ட விண்கல், இன்று பூமிக்கு மிக அருகில், அதாவது, சுமார் 62 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாகத் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

*இதனைத் தொடர்ந்து 12 முதல் 28 மீட்டர் விட்டமுள்ள 2020 கே ஏ 6 என்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நெருங்கியபடி, அதாவது, சுமார் 44.7 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

*இதே போல் 250 மீ மற்றும் 570 மீ விட்டமுள்ள 2002 என்என் 4 என்ற ராட்சத விண்கல்லும் பூமியை நெருங்கியபடி, அதாவது, சுமார் 50.9 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

*நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டும் சுமார் 5 விண்கற்கள் பூமியைக் கடந்து செல்ல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : NASA ,announcement ,Earth ,meteors , Stadium, Giant Meteor, Meteor, Earth NASA, Official, Announcement
× RELATED வியாழன் கோளின் நிலவான யூரோபாவில் உள்ள...