×

உலக நன்மைக்கான இணைந்து பணியாற்ற வேண்டும்; இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை...!

டெல்லி: இந்திய- ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த மாநாடு புதுடேல்லியில் நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க கடந்த ஜனவரி மாதம் ஆஸ்தி ரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக அவரது பயணம் மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இன்று உச்சிமாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் ஆலோசனை நடத்தி  வருகிறார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் உலகின் ஒவ்வொரு பகுதிகளையும் பாதித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என்றார்.

மேலும், ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா உறவு மிகவும் இயல்பான உறவு. உலக நன்மைக்கான இந்தியா- ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த தொற்றுநோயின் பொருளாதார மற்றும் சமூக பக்க விளைவுகளை சமாளிக்க உலகிற்கு ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு அணுகுமுறை தேவை. ஆஸ்திரேலியாவுடனான உறவை விரிவுபடுத்துவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது. இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் இன்றியமையாதது. இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகள் ஆழமடைந்துள்ளன. இந்த ஆழம் எங்கள் பகிரப்பட்ட மதிப்புகள், பகிரப்பட்ட ஆர்வங்கள், பகிரப்பட்ட புவியியல் மற்றும் பகிரப்பட்ட நோக்கங்களிலிருந்து வருகிறது. கொரோனா காலத்தில் இந்திய மாணவர்களுக்கு உதவியதற்கு ஸ்காட் மோரிசனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

மாநாட்டில் உரையாற்றிய ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன், நீங்கள் எப்போதும் தொழில்நுட்ப துறையில் ஒரு முன்னோடியாக இருந்தீர்கள். அடுத்த முறை இந்தியா வரும் போது, பாசமாக உங்களை கட்டியணைத்து சமோசா மற்றும் குஜராத் கிச்சடி கொடுப்பேன் என்றார்.

இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் மருந்து பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் தாது உப்புகள் பரிமாற்றம் செய்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி, விவசாய பொருட்கள் ஏற்றுமதி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமென கூறப்படுகிறது. இந்தோ பசிபிக் பகுதியில் சீனா தனது ஆக்கிரமிப்பை அதிகரித்து வரும் பின்னணியில், ஆஸ்திரேலியா உடனான இருதரப்பு உறவுகள் மேம்படுமென நம்பிக்கை எழுந்துள்ளது.



Tags : summit ,Modi ,Australia ,India ,India-Australia Summit , To work in conjunction with the global good; PM Modi addresses India-Australia summit
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...