×

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.35,648-க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.35,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.16 குறைந்து ரூ.4,456-க்கும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஒருவாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ..53.70 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.53.10 ஆக குறைந்துள்ளது.

Tags : Chennai , Chennai, Gold, Price, Sales
× RELATED இமாலய உச்சத்தில் தங்கம் விலை.....