×

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஒரு நாளைக்கு ரூ.23,000 வசூலிக்கலாம்; தனியார் மருத்துவமனை கட்டண நிர்ணயிக்க அரசுக்கு IMA பரிந்துரை

சென்னை; கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசுக்கு ஐஎம்ஏ தமிழப்பிரிவு பரிந்துரை செய்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களிடம் ஆரம்பகட்ட பரிசோதனையில் தொடங்கி, நோய்  குணமாகும்வரை தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மறுக்கும் நோயாளிகளை பாதியிலேயே திருப்பி அனுப்பும் கொடுமையும் நடக்கிறது. பணம் இல்லை என்பதற்காக சிகிச்சை  அளிக்க மறுப்பது அடிப்படை மனித உரிமைகளுக்கும், அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது தனியார் மருத்துவமனைகளின் கடமையாகும். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மற்ற  மாநிலங்கள் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்கள் தொடர்பாக வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

எனவே, கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசு கட்டணங்களை வரைமுறைப்படுத்தி வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதனை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக கூறிய  வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ தமிழப்பிரிவு பரிந்துரை செய்துள்ளது. அதில், லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக  சுமார் ரூ.2,31,820 வசூலிக்க இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்தரை செய்துள்ளது. அதனைபோல், லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு 17 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.4,31,411 வசூலிக்க பரிந்தரை செய்துள்ளது. லேசான பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.23,000 வரை வசூலிக்கவும், அதிக பாதிப்புள்ள கொரோனா நோயாளிக்கு ஒரு நாளைக்கு ரூ.43,000 வசூலிக்கவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு  நாளைக்கு ரூ.9,600 வரை வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.


Tags : IMA ,government ,Corona , Corona can charge up to Rs 23,000 a day for treatment; IMA recommends government to fix private hospital bills
× RELATED சென்னையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 25 பேர் உயிரிழப்பு