×

சீனா தாய் வீடு; சென்னை புகுந்த வீடு; கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் சென்னை மாநகரம்..!!

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 17,598-ஆக உயர்ந்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 68.64 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் முக்கியமான 7 மண்டலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 3,224 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 9,034 பேர் குணமடைந்துள்ள நிலையில் 158 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :

ராயபுரம் – 3,224
கோடம்பாக்கம் – 2,029
திரு.வி.க நகரில் – 1,798
அண்ணா நகர் – 1,525
தேனாம்பேட்டை – 2,014
தண்டையார் பேட்டை – 2,093
வளசரவாக்கம் – 939
அம்பத்தூர் – 651
அடையாறு – 1,007
திருவொற்றியூர் – 610  
மாதவரம் – 431
பெருங்குடி – 301
சோளிங்கநல்லூர் – 306
ஆலந்தூர் – 261
மணலி – 246 பேர்...

தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் நேற்றைய விவரத்தின் படி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8,405 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : China Mother Home ,House ,Madras ,Madras Metropolitan Area ,Zones , Corona, Madras
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...