×

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா ? : 3,500 பேரிடம் பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு திட்டம்

வாஷிங்டன் : ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்த மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்க உலக சுகாதார அமைப்பு தீர்மானித்துள்ளது. கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைக்கான சோதனை நெறிமுறைகளை மாற்ற வேண்டிய தேவையில்லை என்று உலக சுகாதார தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு பரிந்துரைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்த சோதனைகள் அனைத்தையும் தொடர உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை, நோய் தடுப்பு மற்றும் நோய் கண்டறியும் செயல்பாடுகளில் அறிவியல் கண்ணோட்டத்துடன் தொடர்ந்து செயல்பட உலக சுகாதார அமைப்பு உறுதியளித்துள்ளது. இதையடுத்து 35 நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட 3,500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளிடம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மீண்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கிடைக்கும் முடிவின் அடைப்படையில், கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : World Health Organization , Hydroxy chloroquine, drug, corona, 3,500 people, World Health Organization, program
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...