×

மகாராஷ்டிராவில் பாதிப்பு 75,000-ஐ நெருங்கியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.16 லட்சமாக உயர்வு; 6075 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா  வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24   மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை  6075 பேர் உயிரிழந்த நிலையில், 1,04,107 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2587 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,329 பேர்   குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 25,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை   208 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,316 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 23,645 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு,   606 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9542 பேர் குணமடைந்துள்ளனர்.  உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 1672 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 413 பேர் குணமடைந்தது.
பீகாரில் 4390 பேருக்கு பாதிப்பு; 25 பேர் பலி; 2077 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 301 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 214 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 668 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 188 பேர் குணமடைந்தது.

கோவாவில் 79 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 57 பேர் குணமடைந்தது.
குஜராத்தில் 18,100 பேருக்கு பாதிப்பு; 1122 பேர் பலி; 12,212 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 2954 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி; 1089 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 468 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 173 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 1494 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 651 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 9652 பேருக்கு பாதிப்பு; 209 பேர் பலி; 6744 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 752 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 321 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 90 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 48 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 118 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 33 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 13 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 14 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 2388 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 1416 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 82 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 25 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 2376 பேருக்கு பாதிப்பு; 47 பேர் பலி; 2029 பேர் குணமடைந்தது.
உத்தரகாண்ட்டில் 1085 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 282 பேர் குணமடைந்தது.
கர்நாடகாவில் 4063 பேருக்கு பாதிப்பு; 53 பேர் பலி; 1514 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 2857 பேருக்கு பாதிப்பு; 34 பேர் பலி; 1007 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 3020 பேருக்கு பாதிப்பு; 99 பேர் பலி; 1556 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 6508 பேருக்கு பாதிப்பு; 345 பேர் பலி; 2580 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 8729 பேருக்கு பாதிப்பு; 229 பேர் பலி; 5176 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 4080 பேருக்கு பாதிப்பு; 68 பேர் பலி; 2466 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 38 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 8588 பேருக்கு பாதிப்பு; 371 பேர் பலி; 5445 பேர் குணமடைந்தது.
இமாச்சலப்பிரதேசத்தில் 359 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 150 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 8 பேருக்கு பாதிப்பு; 7 குணமடைந்துள்ளார். யாரும் உயிரிழக்கவில்லை.
சிக்கிமில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Tags : Maharashtra ,India , Impact on Maharashtra approaching 75,000: Coronavirus rise in India to 2.16 lakh 6075 killed
× RELATED என்கவுன்டரில் 4 நக்சல்கள் பலி