சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஒரேநாளில் 50 விமான சேவை

சென்னை: சென்னை விமானநிலையத்தில்  இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களும், பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று 50 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் 25 விமானங்கள் சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், கவுகாத்தி, அந்தமான், திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, விஜயவாடா, ராஜமுந்திரி, கடப்பா, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட  இடங்களுக்கு சென்றன. இந்த விமானங்களில் பயணிக்க சுமார் 3,350 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதேபோல, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 25 விமானங்கள் இயக்கப்பட்டன. அந்த 25 விமானங்களிலும் சென்னை வருவதற்கு 1,950 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் கடந்த 10 நாட்களில் நேற்று அதிகபட்சமாக 50 விமானங்கள் இயக்கப்பட்டன. இதேபோல், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து நேற்று ஒரே நாளில் சுமார் 5,300க்கும் அதிகமான பயணிகள் சென்றனர். இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: