பைக்கில் 2 பேர் பயணம் 1700 பேரிடம் 8.50 லட்சம் வசூல்: போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகரில் நோய் தொற்று பரப்பும் வகையில் ஒரே பைக்கில் 2 பேர் பயணம் செய்ததாக இரண்டு நாட்களில் 1700 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.8.50 லட்சம் பணம் அபராதமாக போக்குவரத்து போலீசார் வசூலித்தனர். சென்னை மாநகரில் மக்களிடையே கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதமாகவும், நடந்து செல்லும்போது முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும், கார்களில் ஓட்டுனரை தவிர்த்து 3 பேரும், ஆட்டோவில் ஓட்டுநரை தவிர்த்து 2 பேரும், பைக்கில் ஒருவர் மட்டும் தான் பயணம் செய்ய வேண்டும். அப்படி பயணம் செய்யாத நபர்கள் மீது ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 ஆனால் மக்கள் வாகனங்களில் செல்லும் போது யாரும் மாநகராட்சி ஆணையரின் உத்தரவை யாரும் கடைபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே சென்னை கொரோனா பாதிப்பில் தொடர்ந்து சிவப்பு மண்டலமாக தொடந்து நீடிக்கிறது. மேலும், சென்னையில் தினமும் 500 முதல் 1000ம் வரை பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே நோய் தொற்றின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வாகனங்களில் அரசு அனுமதி அளித்த நபர்களை விட கூடுதலாக பயணம் செய்யும் நபர்கள் மீது சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி மாநகர போக்குவரத்து போலீசார் ேநற்று முன்தினம் முதல் அபராதம் விதித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு உத்தரவை மீறி பைக்கில் சமூக இடைவெளி இல்லாமல் 2 பேர் பயணம் செய்ததாக நேற்று முன்தினம் முதல் நேற்று வரை 1700 நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்து சட்டம் 179 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலா ரூ.500 அபராதமாக மொத்தம் ரூ.8.50 லட்சம் பணம் வசூலித்தனர். இந்த நடைமுறை ெதாடர்ந்து நீடிக்கும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: