அடுத்த வாரம் வருகிறது 100 வென்டிலேட்டர்

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேரசியில் உரையாடினார். இருவரும் சுமார் 25நிமிடங்கள் பேசினார்கள். அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியுடனான உரையாடலின்போது இந்தியாவிற்கு முதல் கட்டமாக 100 வென்டிலேட்டர்களை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். அடுத்த வாரம் கப்பல் மூலமாக இவை இந்தியா அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிபர் உறுதி அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரு நாட்டு தலைவர்களும் இரு நாடுகளிலும் கோவிட்-19 நோய் தொற்று காரணமாக நிலவும் சூழல், இந்திய-சீன எல்லை பிரச்னை, உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதன் அவசியம் உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தாக கூறப்படுகின்றது.

Related Stories: