×

உலக கோப்பை ஹாக்கியில் மாற்றம்

ஹாக்கி உலக கோப்பை  போட்டியில் வழக்கமாக 16 அணிகள் பங்கேற்கும். இதில் 5 அணிகள் ஆசியா, ஐரோப்பியா என 5 கண்டங்கள் வாரியாக சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாக இருக்கும். எஞ்சிய 11 அணிகள்  போட்டியை நடத்தும் நாடு உட்பட தகுதிச்சுற்று தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும். இதில் மாற்றங்களைச் செய்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்) நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும்  ஆண்கள்  உலக கோப்பை  ஹாக்கிப் போட்டியில்,   ஆசிய கண்டத்தில் இருந்து போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 3 அணிகள், ஐரோப்பாவில் இருந்து  4அணிகள்,  ஓசனியாவில் இருந்து 2,  ஆப்ரிக்க, பான் அமெரிக்க கண்டங்களுக்கு தலா ஒன்று என 11 அணிகள் நேரடியாக தகுதிபெறும்.

அதேபோல் 2022ம் ஆண்டு நெதர்லாந்து, ஸ்பெயினில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை போட்டிக்கு ஐரோப்பாவில் இருந்து    போட்டியை நடத்தும் 2 நாடுகள்  உட்பட  4 அணிகள், ஆசியா, ஓசனியா, பான் அமெரிக்கா கண்டங்களில் இருந்து  தலா 2 அணிகள் என மொத்தம் 11 அணிகள் நேரடியா பங்கு பெறும். இந்த 2 உலக கோப்பைகளுக்கும் எஞ்சிய தலா 5 அணிகள், 2022 மார்ச் முதல் நடைபெறும்  தகுதிச்சுற்று  தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்


Tags : World Cup , World Cup hockey
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது