×

நிறவெறிக்கு எதிராக கால்பந்து வீரர்கள்

அமெரிக்காவில் போலீஸ்காரர் ஒருவரால்  ஜார்ஜ் புளாய்ட் என்ற கறுப்பின நபர் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கு உலகம் முழுவதும் கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் நடைபெறும் பண்டெஸ்லிகா  கால்பந்து தொடரில் புருசியா டார்ட்மண்ட் அணிக்காக கோலடித்த  ஜடோன் சஞ்சோ களத்திலேயே, ‘ஜார்ஜ் புளாய்டுக்கு  நீதி வேண்டும்’ என்று எழுதப்பட்ட சீருடை அணிந்து குரலெழுப்பினர். அவரைப் போலவே அந்த அணியின் வீரர்கள்  ஹக்கிமி, வெஸ்டன் ஆகியோரும் அதே குரலை எதிரொலித்தனர். போட்டிகளின்போது அரசியல், மதம், தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து முழக்கங்கள் எழுப்ப,  அறிக்கைகள், படங்கள், பதாகைகள் காட்டுவது விதிமீறல் என்பதால், வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வீரர்கள் வெளிப்படுத்திய  உணர்வு, கவலையின்  ஆழத்தை ஃபிபா புரிந்துக் கொள்கிறது. வீரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Tags : Football players , Football players
× RELATED ட்வீட் கார்னர்... நிறவெறியை வெறுப்போம்!