தமிழகத்தில் யாரும் வேலை பார்க்காமல் டாஸ்மாக் செல்வதையே விரும்புகின்றனர்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வருத்தம்

மதுரை: தமிழகத்தில் யாரும் வேலை பார்க்காமல் டாஸ்மாக் கடைக்கு செல்வதையே விரும்புவதாக ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர். ராமநாதபுரம் மேல்கரையைச் சேர்ந்த மலைக்கண்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்திலுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் பதிவு செய்யாமல் உள்ள அனைவருக்கும் தேவையான உதவிகளை அரசின் சார்பில் வழங்கிட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘புலம் பெயர் தொழிலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது ‘‘தமிழகத்தில் பலர் வேலை பார்ப்பதை விரும்பவில்லை. டாஸ்மாக் திறந்ததும், அங்கு செல்லவே விரும்புகின்றனர். இன்னும் சிலர் மனைவியின் வருமானத்தில் சாப்பிடுகின்றனர். அதே நேரம் பதிவு செய்யப்படாத தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும். தமிழகத்திலுள்ள நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை பெற்று நீதிமன்றத்திற்கு ெதரிவிக்க வேண்டும். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் நலத்திட்டங்களை பொதுமக்கள் பெற்றிட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: