×

சென்னையில் வேகமாக பரவுகிறது கொரோனா: ஒரே நாளில் 1012 பேர் பாதிப்பு: தினமும் பலி அதிகரிப்பு

* சென்னையில் நாளுக்கு நாள் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து  வருகிறது.
* தலைநகரில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது.
* தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.
* 4 நாட்களாக தமிழகத்தில் கொரோனா  பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருவது பொதுமக்கள் மத்தியில்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில்,  சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் மிக அதிகமாக 1012 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதுவரை மாநிலத்தில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது.
 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முதல் மற்றும் 2வது ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா 3 வது மற்றும் 4து ஊரடங்கு காலத்தில் மிகவும் வேகமாக பரவியது. தற்போது 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மடங்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட சில நாட்களில்  தமிழகத்தில் தினசரி ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஆனாலும் தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்று தமிழக அரசு கூறிவருகிறது. இதை மறுக்கும் மருத்துவ நிபுணர்கள், தமிழக அரசு உண்மையை ஒப்புக் ெகாண்டு, சமூக பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:   தமிழகத்தில் நேற்று மட்டும் 14,101 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1286 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் வசிப்பவர்கள் 1244 பேர். இதைத் தவிர்த்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, தமிழகம் வந்த 2 பேர், துபாயில் இருந்த வந்த 13 பேர், குஜராத்தில் இருந்து வந்த 3 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த 3 பேர், டெல்லியில் இருந்து வந்த 5 பேர், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 16 பேர் உள்ளிட்ட மொத்தம் 1286 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 1012 பேர், செங்கல்பட்டில் 61 பேர், திருவள்ளூரில் 58 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர்,  தூத்துக்குடியில் 17 பேர், திருவண்ணாமலையில் 16 பேர், மதுரையில் 7 பேர், நெல்லை மற்றும் தஞ்சாவூரில் 6 பேர்,  கடலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 5 பேர், கோவை, திருப்பத்தூர் மற்றும் வேலூரில் தலா 4 பேர், கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசியில் 3 பேர்,  திருவாரூரில் 2 பேர், கன்னியாகுமரி, கரூர், நாகை, சேலம், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.    இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 787 பேர் ஆண்கள். 498 பேர் பெண்கள். ஒரு திருநங்கையும் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை 16,181 ஆண்கள், 9677 பெண்கள், 14 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 610 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 11,345 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து தமிழகத்திற்கு விமானம், ரயில்கள், பேருந்துகள், சாலை மார்க்கமாக வந்த 1,19,486 பேரில் தற்போது வரை 1,724 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ெகாரோனா பரிசோதனை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிய வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  குறிப்பாக நிபுணர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் சென்னையில் தினசரி 10 ஆயிரம் பேருக்கும், மற்ற மாவட்டங்களில் தினசரி 8 ஆயிரம் பேருக்கும் சோதனை செய்ய வேண்டும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சோதனை செய்து பாதித்தக்கப்பட்டவர்களை விரைந்து கண்டறிந்தால் மட்டுமே பலி எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்றும் இல்லாவிடில் வரும் நாட்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் மட்டும் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. மேலும் பலர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக ஏற்கனவே பல்வேறு பாதிப்புகளுடன் உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விடுகின்றனர். சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட உடனே மரணம் அடைந்து விடுகின்றனர். இந்நிலையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதைத்தவிர்த்து உடல் நலம் சரி இல்லாமல் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த 6 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர். அந்த சோதனையின் முடிவுகள் இன்று தெரியவரும். மேலும் அவர்கள் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதால் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதைபோன்று ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் ஒருவர், ஓமந்தூரார் மருத்துவமனையில் ஒருவர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் என ெமாத்தம் 17 பேர் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொடர்ந்து இறப்பதால் பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madras ,Corona , Chennai, Corona, curfew, Tamil country
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி...