×

சென்னை, காஞ்சிபுரம், உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்த வரும் 15-ம் தேதிக்கு பிறகு காலநீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையே மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது. நான்கு மாத மின்நுகர்வை இரண்டாக பிரித்து மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இல்லங்களுக்கு உள்ளாகினர்.

இந்த சூழ்நிலையில், ஐந்தாவது ஊரடங்கு தற்போது தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்சார வாரியத்தால் 2 மாதத்திற்கு ஒருமுறை வழக்கமான நடைமுறைப்படி கணக்கீடு செய்யப்படுகிறது என்றும், ஊரடங்கு காரணமாக 4 மாத மின் நுகர்வு இரண்டு மாத மின் நுகர்வாக பிரிக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது. முந்தைய மாத யூனிட் கழிக்கப்படாமல், மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின் கட்டணம் தொடர்பாக பல அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மின்சார வாரியம் இதனை அறிவித்துள்ளது. கணக்கீடு முறையில் சந்தேகங்கள் இருந்தால் மின்வாரிய அலுவலகத்தை அணுகலாம். கணக்கீடு முறை http://tangedco.in.gov.in இணையதளத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின்கட்டணம் செலுத்த வரும் 15-ம் தேதிக்கு பிறகு காலநீட்டிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : districts ,Chennai ,Kanchipuram , Chennai, Kanchipuram, electricity bills, electricity
× RELATED தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3...