×

ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

டெல்லி: ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலீடுகளை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க வழிகாட்டுதல்கள் குழு அமைபக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் விளைப்பொருட்களை தடையின்றி விற்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்த அவர், விவசாயிகளுக்காக 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக, விவசாயிகள் தங்களுடைய விளைப்பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயித்து கொள்ள இது வழிவகுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : Union Cabinet ,nation ,Prakash Javadekar ,One Nation , Central Cabinet, Prakash Javadekar, Farmers
× RELATED டெல்லியில் மத்திய அமைச்சர்...