×

அதிர வைக்கும் ஆய்வு

நன்றி குங்குமம் முத்தாரம்

சமீபத்தில்  வெளியான ஓர் ஆய்வு பெரும் அதிர்வைக் கிளப்பியிருக்கிறது. ‘‘இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அதிகரித்துவிட்டனர்...’’ என்பதுதான் அந்த ஆய்வின் சாரம். ‘‘இளைஞர்களில் ஐந்தில் ஒருவர் தான் கண்பரிசோதனை செய்துகொள்கின்றனர்.  தவிர, 84 சதவீதம் பேர் மருத்துவர்களின் ஆலோசனைகளையே கேட்பதில்லை...’’ என்கிறது அந்த ஆய்வு. டெல்லி, மும்பை உள்ளிட்ட பத்து  நகரங்களில் இந்த ஆய்வு செய்யப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கண் பார்வை பரிசோதிக்கப்பட்டது. 300 கண் மருத்துவர்கள் இந்த ஆய்வை செய்திருக்கின்றனர். வாழ்க்கை முறை, சர்க்கரை நோய், மோசமான வெளிச்சங்களால் அதிகமான பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. பார்வைக் குறைபாடு இருக்கும் 65 சதவீதம் பேர் எந்தவிதமான சிகிச்சையும் எடுக்காமல் தொடர்ந்து அப்படியே வாழ்கின்றனர். உண்மையில் அவர்களுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதே தெரிவதில்லையாம்.

Tags : Stunning study
× RELATED புதுச்சேரியில் வெங்காயம் விற்பனை:...