சிக்னல் இல்லாத பசுமை வழிச்சாலை; அமிர்தசரஸில் இருந்து டெல்லி ஏர்போர்ட்டுக்கு இனி 4 மணி நேரம் தான்...மத்தியமைச்சர் நிதின் கட்கரி டுவிட்

டெல்லி: அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் இடையே சிக்னல்கள் இல்லாத பசுமை வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லி- அமிர்தசரஸ் விரைவுவழிச் சாலையின் ஒரு பகுதியாக நகோடரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு புதிய பசுமை வழிச் சாலை ஏற்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுல்தான்பூர் லோதி, கோயிந்த்வால் சாகிப், கடூர் சாகிப், கர்தார்பூர் சாகிப் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த பசுமைவழி சாலை அமையவிருக்கிறது.

Advertising
Advertising

இந்த திட்டத்தின் கீழ் அமிர்தசரஸ்- குர்தாஸ்பூர் சாமையில் முழுமையாக மேம்படுத்தப்படும் மற்றும் சிக்னல்கள் இல்லாத சாலை வழியாக இது இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பசுமைவழிச் சாலை திட்டம் நிறைவடைந்த பிறகு அமிர்தசரஸில் இருந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செல்வதற்கான நேரம் பாதியாக குறைந்து விடும் என்று கூறியுள்ளார், அதாவது பயண நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரமாக குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பஞ்சாப் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவு செய்யப்படுவதாக கட்கரி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக முதலாவது கட்டமாக ரூ,25 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பசுமை வழிச்சாலை சுற்றுலா பயணிகள் அதிகம்  வரும் அமிர்தசரஸ் நகரத்தை குறுகிய காலத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்படுகிறது.

Related Stories: