ஆடு கஃபே

நன்றி குங்குமம் முத்தாரம்

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உலகின் முதல் செம்மறி ஆடு கஃபேவைத் திறந்திருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதற்காக பூனை கஃபே, நாய் கஃபே என்று ஏராளமான கஃபேக்கள் இருக்கின்றன. காபிக்கடையும், செல்லப்பிராணிகளின் பராமரிப்பும் ஒரே கூரையின் கீழ் இயங்கும். ஆனால், இதுவரைக்கும் செம்மறி ஆடுகளுக்கு ஸ்பெஷலாக எந்த கஃபேவும் இல்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்திருக்கிறது செம்மறி ஆடு கஃபே. புழுதி படிந்து, சேற்றில் புரண்டு அழுக்கு நிறைந்த செம்மறி ஆட்டைக் கூட சுத்தமாக குளிப்பாட்டி டிஸ்னி பொம்மையைப் போல பளிச்சென மாற்றித் தருகிறார்கள்.

இந்த மேஜிக்குளியலுக்காக பிரத்யேகமாக சில கெமிக்கல்களைப் பயன்படுத்துகின்றனர். அந்தக் கெமிக்கல்கள் எல்லாம் ரகசியம் காக்கப்படுகிறது. நீங்கள் ஒரு கப் காபியைப் பருகி முடிப்பதற்குள் செம்மறி ஆட்டைக் குளிப்பாட்டி அதன் தோற்றத்தை மாற்றிவிடுவதுதான் இதில் ஹைலைட்.

Related Stories: