×

தீப்பிடிக்காத உடை தயாரிக்கும் யுனிஃபர்ஸ்ட் நிறுவனம்!

யுனைடெட் ஸ்டேட்ஸின் வில்மிங்டனில் மசாசூட்ஸ் என்னும் இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது சீருடைகளை விற்பனை செய்யக்கூடிய, பாதுகாப்பான உடைகளைத் தயாரிக்கக்கூடிய unifirst என்ற நிறுவனம். இந்நிறுவனம் 14,000 ஊழியர்களுடன் கனடா, யூரோப் உட்பட 260 இடங்களில் சர்வீஸ் சென்டர், டிஸ்ட்ரிப்யூஷன் சென்டர், புரடக்‌ஷன் பிளான்ட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் சமீபத்தில் ஒரு புதுமையைப் படைத்துள்ளது. குண்டு வெடித்தாலும் பாதிப்படையாமல் இருக்கும் உடையைக் கண்டுபிடித்துள்ளது. சாதாரண உடைகள் தீப்பிடிக்கக்கூடியவை. ஆனால், Unifirst தயாரித்துள்ள இவை Fire-Resistant உடைகள் தீப்பிடிப்பதில்லை. இந்த தீப்பிடிக்காத ஆடையை உலகம் முழுவதும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தீப்பிடிக்கும் வகையிலான ஆபத்தான வேலை செய்வோர் விரைவில் பயன்படுத்த உள்ளனர்.

Tags : Unifurst Company ,UniFirst , Fire, Style, UniFirst Company
× RELATED கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கொள்ளை: மகாராஷ்டிரா நகைக்கடையில் துணிகரம்