வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்துவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் தேவலாவில் 9 செ.மீ மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சித்தாரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், பெருஞ்சானி மற்றும் புத்தன் அணைக்கட்டு பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும், பேச்சிப்பாறை, சிவலோகம், நாவலூர் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், சுருளகோடு பகுதியில் 4 செ.மீ மழையும், கொளச்சல், தக்களை, எரானியேல், திருச்சி ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும், பாபநாசம், மனிமுத்தாறு, மைலாடி ஆகிய பகுதிகளில் தலா செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை, என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: