×

ஜூன் 15 முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; வரும் 8-ம் தேதிக்குள் பணிபுரியும் மாவட்டத்திற்கு திரும்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...!

சென்னை: தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த நிலையில் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 26ம் தேதி  முடிய இருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 1 தேர்வு ஒன்று, 10-ம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என  ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கால அட்டவணைப்படி எதுவும் நடத்த முடியாமல் போனது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் பாக்கியுள்ள பிளஸ் 1 தேர்வுகள் நடத்த அரசு திட்டமிட்டது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை  நடைபெறும் என அறிவித்தது. இதற்கிடையே, கொரோனா காலத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது அவர்களின் மனநிலை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் தேர்வு ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றி தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11-ம் வகுப்பு தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெறும் என்றும் 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதி  நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முன்னதாக, ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அரசு அறிவித்ததால், அரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும்( தொடக்க, நடுநிலை,  உயர்நிலை மற்றும் மேல்நிலை) பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020-ற்குள் வந்து இருக்க  வேண்டும்.

அதனை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்த என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது. இந்நிலையில், 10-ம் வகுப்பு  பொதுத்தேர்வு நடைபெற இன்னும் 12 நாட்களே உள்ளதால், தமிழகத்தில் வரும் 8ம் தேதிக்குள் பணி செய்யும் மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும்,  ஆசிரியர்களின் வருகையை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : school teachers ,Elections ,Teachers ,work district , June 10 to 10th General Elections; School teachers ordered to return to work district by 8th ...
× RELATED 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு...