×

சுட்டெரிக்கும் கோடை வெயில் சாத்தனூர் அணை நீர்மட்டம் 78 அடியாக சரிந்தது: கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ஆபத்து

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டத்தில், கோடை வெயில் தொடர்ந்து 100 டிகிரியை கடந்து சுட்டெரிக்கிறது. இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்திருக்கிறது. அக்னி நட்சத்திர வெயில் காலம் கடந்த மாதம் 28ம் தேதியுடன் முடிந்தது. ஆனாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்ைல. கத்தரி எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும், 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரிக்கிறது.
வழக்கமான கோடை மழையும் இதுவரை கைகொடுக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்தது. அதிகபட்சமாக ஆரணியில் 19 மிமீ மழையும், ஜவ்வாதுமலை பகுதியில் 12 மிமீ மழையும் பதிவானது. மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்தது.தொடர்ந்து சுட்ெடரிக்கும் கோடை வெயிலால், மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துவிட்டது. பெரும்பாலான நீர்நிலைகள் வறட்சியின் கொடூரத்தை உணர்த்தும் சாட்சிகளாக மாறியிருக்கிறது.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை, குப்பனத்தம் அணை, மிருகண்டா நதி அணை, செண்பகத்ேதாப்பு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வெயில் காரணமாகவும், மழை பெய்யாததாலும் அணைகளின் நீர்மட்டம் சரிந்துவிட்டது.  

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி, மொத்தமுள்ள 119 அடியில் 78.40 அடியாக அடியாக குறைந்திருக்கிறது. அணையின் மொத்த நீர்கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில், தற்போது 1,388 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது.கடந்த ஆண்டும் போதுமான மழையில்லாத காரணத்தால், சாத்தனூர் அணை முழுமையாக நிரம்பவில்லை. அதிகபட்சம் 97.65 அடி மட்டுமே நிரம்பியது. எனவே, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்கு மட்டும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், 45 நாட்களுக்கு பிறகு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அணை பராமரிப்புக்கு 307 மி.க.அடி, நீர் ஆவியாததால் ஏற்படும் இழப்பு 261 மி.க.அடி என பொதுப்பணித்துறை கணக்கிட்டுள்ளது. எனவே, தற்போது இருப்பு உள்ள நீரை பயன்படுத்தி, பருவமழைக்காலம் தொடங்கும் வரை கூட்டுக்குடிநீர் திட்டங்களை சமாளிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 30 அடியாகவும், குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 24 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 0.33 அடியாகவும் குறைந்திருக்கிறது.

Tags : Saturnur Dam , Saturnur Dam, collapses , 78 feet
× RELATED திருவண்ணாமலை, விழுப்புரம்...