சுடாத செங்கல் மூலம் ஐரோப்பிய பாணியில் அடுக்கு மாடி கட்டிடம்: பெரம்பலூர் பொறியியல் பட்டதாரி மாணவர் சாதனை

பெரம்பலூர்: சுட்ட செங்கல் இல்லாமல் சுடாத செங்கல்லை தானே தயாரித்து ஐரோப்பிய முறையில் அடுக்கு மாடிவீடு கட்டி பெரம்பலூர் பொறியியல் பட்டதாரி மாணவர் சாதனை படைத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் வேப் பந்தட்டை தாலுகா அன் னமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் அசோகன்(51). இவர் அந்த ஊராட்சியில் தூய்மை பணியாளராகப் பணி புரிந்து வருகிறார். இவரது மகன் ஜெகன்(28). அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படித்து வரு கிறார். இவர் கடந்த ஒருமா தத் திற்கு முன் தந்தை யின் விருப்பத்தை நிறை வேற்ற அடுக்குமாடி வீடு கட்ட முடிவுசெய்தார். இதற்காக சாதாரணமாகவே ரூ.21 லட்சம் செலவாகும் நிலை யில், தற்சார்பு முறையில் வீட்டுக்கு பயன்படுத்தப்ப டும் செங்கல்லை தானே தயாரித்தால் 5 லட்சமாவது குறையும் எனக் கணக்கிட்டதால், வழக்கமான செங்கல் லைப் பயன்படுத்தாமல் செம்மண் கலவையைக் கொண்டு சுடாத செங்கல்லைத் தானே தயாரிக்கத் தொடங்கிவிட்டார். இது சா தாரண செங்கல்லைவிட சற்று பெரிதாகவும், அதிக திடமானதாகவும் உள்ளபடி தயாரித்து வருகிறார். செங் கல் தயாரிப்புக்காக மரங்களை வெட்டி சூளையில் வைத்து சுட்டு, சுற்றுச்சூழ லுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், அதேநேரம், ஐரோப்பிய மாடலில் மெத்தைக் கான சீலிங் இல்லாமல் வ ளைவு வடிவில் மேல்தளத் தை அமைத்துள்ளார்.

Advertising
Advertising

மேலும் மறு சுழற்சியாகப் பயன்படுத்தக் கூடிய பொ ருட்களையே அதிகம்பயன் படுத்திவருகிறார். இவரது யோசனையில் 80சதவீதம் உருவாகிவிட்ட இந்த வீட்டி ற்கு சுடாத செங்கல்லைப் பயன்படுத்துவதைப் போல வேறென்ன சிறப்பு என்றா ல், செங்கல்வரி வைத்து மண் கலவையில் வெறும் 3 சதவீத சிமெண்டை மட்டும் பயன்படுத்தி கட்டுமானத்தை இணைப்பதால் இதற்கு மேல் தனியாக பூச்சுவே லை, டைல்ஸ் ஒட்டுவது, பெயிண்ட் அடிப்பது போன்ற வேலைகளே இல்லையெ ன்பதுதான். இதுகுறித்து பொறியியல் பட்டதாரி ஜெகன் தெரிவித்ததாவது: ஒருநாளில் 300 செங்கல் தயாரித்து 6 ஆயிரம் செங்கல் கொண்டு மாடிவீடு கட்டத் திட்டமிட்டுள்ளேன். இதில் பூச்சுவேலை, பெயிண்ட் வேலை, டைல்ஸ் ஒட்டும் வேலைகள் கிடையாது என்பதுபோல், வளைவு வடிவ சீலிங்முறை மேலும் சிற ப்பாகும். இதன்மூலம் ரூ5 லட்சத்தை மிச்சப்படுத்த முடியும் என நம்புகிறேன். இது இயற்கைக்கு கேடு விளைவிக்காத முறையில் கட்டப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Related Stories: