நிஷர்கா புயல் குறித்து ஆலோசனை; டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்...!

புதுடெல்லி: “நிஷர்கா” புயலாக மாறி நேற்று முதல் மகாராஷ்ட்ரா மற்றம் குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய  கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த நிசார்கா தீவிர புயலாக மாறியுள்ளது. மும்பை அருகே இன்று பிற்பகலில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு  குழுவினர், ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், நிஷர்கா” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று 11.00  மணிக்கு நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகள்,கல்லூரிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று கடந்த 30-ம் தேதியுடன்  ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2-வது ஆட்சி காலத்தில் இரண்டாம் ஆண்டின் 2-வது மத்திய அமைச்சரவை கூட்டம் இது. நேற்று முன்தினம் முதல் மத்திய அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: