×

மருத்துவ குழு துபாய் பயணம்

சென்னை: சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை சேர்ந்த 21 டாக்டர்கள், 151 நர்ஸ்கள் என மொத்தம் 172 மருத்துவ குழுவினர் நேற்று அதிகாலை 4.50 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில்  துபாய் புறப்பட்டனர்.துபாயில் உள்ள தனியார் அமைப்பு 3 மாத ஒப்பந்த அடிப்படையில் இவர்களை துபாய் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக இந்தியர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மருத்துவ காரணத்தின் அடிப்படையில் ஐக்கிய அரபு அரசு, இந்திய அரசுடன் பேசி, சிறப்பு அனுமதி பெற்றுள்ளது. இவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் 3 மாதம் மருத்துவ சேவைசெய்து விட்டு, இந்தியா திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

Tags : team ,Dubai , Medical team , Dubai
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...