×

உணவுப்பொருள் குடோனுக்கு சீல்

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த பாடி குமரன் நகர் கட்டபொம்மன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உணவுப் பொருட்கள் குடோன் செயல்பட்டு வந்தது. இது அனுமதியின்றி செயல்படுவதாக அம்பத்தூர் மண்டல நிர்வாகத்திற்கு பொதுமக்கள்  புகார் அளித்தனர். அதன்பேரில், மண்டல அதிகாரி தமிழ்ச்செல்வன் உத்தரவின் பேரில், உரிம ஆய்வாளர் கமலக்கண்ணன் தலைமையில் ஊழியர்கள் நேற்று குடோனை ஆய்வு செய்தனர். அங்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களுடன் அனுமதியின்றி செயல்படுவது தெரியவந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்தனர்.

Tags : Seal , foodstuff
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...