×

ஜெயலலிதா திரைப்படம்; தீபா மேல்முறையீடு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் “தலைவி” என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.   இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இரு தரப்பு வாதத்தை கேட்டு வழக்கை முடித்து வைத்தார். இந்த உத்தரவை எதிர்த்து தீபா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்து  விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Tags : Jayalalithaa, Film, Deepa, Appeal
× RELATED திருமலை திருப்பதி கோயிலில்...