×

வேணும்ம்ம்... ஆனா வேணா... தனிமை முகாமில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு காண்டம்: கர்ப்பமாவதை தடுக்க பீகார் அரசு நூதனம்

பாட்னா:  உலகம் முழுவதுமான ஊரடங்கின் போது, அனைத்து தொழில்களும் துறைகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், ஆணுறை விற்பனை, பெண்கள் கர்ப்பம் தரித்தல் ஆகியவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஊரடங்கால் சிக்கி பல்வேறு மாநிலங்களில் தவித்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள், தற்போது தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு விதிமுறையின்படி, இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நோய் பாதிப்பு அறிகுறி இருப்பவர்கள், சிகிச்சைக்கு அனுப்பப்படுகின்றனர்.வெளிமாநிலங்களில் தனிமையில் வேலை செய்து வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், வீட்டிக்கு சென்று மனைவியை பார்த்ததும் பரவசத்தில்  பாசமழை பொழிந்து விட வாய்ப்புள்ளது. இதனால், தேவையற்ற கர்ப்பங்கள் அதிகரிக்கும் என பல்வேறு மாநில அரசுகள் அச்சப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பீகார் அரசு நூதனமான ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் தற்போது வரை, தனிமை முகாம்களில் இருந்த 8.77 லட்சம் பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும், 5.30 லட்சம் பேர் மாவட்டம், மண்டல தனிமை முகாம்களில் இருந்து வருகின்றனர். வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, ‘வீட்டுக்கு போனதும் கொஞ்சம் பார்த்து நடந்துக்குங்க...’ என்று அறிவுரை வழங்கி, எல்லாருக்கும் ஆணுறை பாக்கெட்டுகளை கொடுத்து அனுப்புகின்றனர் அதிகாரிகள். இதன் மூலம், அவர்களால் தேவையற்ற கர்ப்பம் ஏற்படுவதை கணிசமாக தடுக்க முடியும் என்று கருதுகின்றனர். இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், ``மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. கொரோனாவுக்கும் இந்த நடவடிக்கைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. கேர் இந்தியா அமைப்பின் ஆதரவுடன், ஆணுறை அளிக்கும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்,’’ என்றார்.

Tags : home ,Ana Vena ,government ,Bihar ,govt ,Quantum: Bihar , Pregnancy, Bihar government, curfew, condom sales
× RELATED வீட்டில் இருந்து வேலை செய்ய போர்...