×

கொரோனா தடுப்பில் சிறந்த நடவடிக்கை உச்சநிலையை இந்தியா இன்னும் தொடவில்லை: மத்திய சுகாதாரத் துறை தகவல்

புதுடெல்லி: `கொரோனா பரவலில் இந்தியா உச்ச நிலையை அடையவில்லை. அதை விட வெகு தொலைவில் உள்ளது’ என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துறையின் கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் நேற்று அளித்த பேட்டி:இந்தியாவில் கொரோனா பாதிப்பு இறப்பு விகிதம் 2.82 சதவீதமாக உள்ளது. உலகளவில் இறப்பு விகிதம் 6.13 ஆக இருக்கிறது. உரிய நேரத்தில் அடையாளம் கண்டறிதல், முறையான சிகிச்சை ஆகியவற்றின் மூலமே இந்தியா இதனை அடைந்துள்ளது. ஒரு லட்சத்தில் 0.41 சதவீதத்தினர் மட்டுமே இறந்துள்ளனர். அதே நேரம், உலகளவில் ஒரு லட்சத்துக்கு 4.9 சதவீதத்தினர் பலியாகி உள்ளனர்.

 இந்தியாவின் மக்கள் தொகையை மொத்தமாக கொண்டுள்ள 14 நாடுகளில் இந்தியாவை விட, இறப்பு விகிதம் 55.2 மடங்கு அதிகமாக உள்ளது. எனவே, இறப்பு எண்ணிகையை மட்டும் கணக்கில் எடுக்காமல், மக்கள்தொகை அடிப்படையிலான இறப்பு எண்ணிக்கையை கணக்கில் கொள்ள வேண்டும். அதை விடுத்து, எண்ணிக்கை அடிப்படையில் உலகளவில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது என்று கூற முடியாது.இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் இறந்த இரண்டு பேரில் ஒருவர் முதியவராவர். இவர்கள் மக்கள்தொகையில் 10 சதவீதமாக உள்ளனர். இறந்த மற்ற 73 சதவீதத்தினர் ஏற்கனவே சளி, காய்ச்சல், இருமல், மூச்சிரைப்பு உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : India ,corporations ,Central Health Department Information India , Corona, India, Central Health Department
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!