×

பீகாருக்கு இயக்கப்படும் 140 சிறப்பு ரயில் 32 ஆக குறைப்பு

பாட்னா: வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த 32 லட்சம் தொழிலாளர்கள், ஊர் திரும்பி விட்டதாக பீகார் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவித்த புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த மே ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பீகார் மாநிலத்துக்கு மட்டும் இதுவரை 1,400 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம், இதுவரை 32 லட்சம் தொழிலாளர்கள் பீகார் திரும்பி விட்டனர். இது தவிர, மக்கள் நடை பயணமாகவும், வாகனங்கள் மற்றும் மாநிலத்துக்கு உள்ளேயான போக்குவரத்து மூலமாகவும், சிறப்பு பேருந்துகள் மூலமாகவும் 10 லட்சம் பேர் திரும்பியுள்ளனர். பீகாருக்கு நாள்தோறும் சராசரியாக 140 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 23 ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் மேலும் குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Bihar , Bihar, special train
× RELATED ராணுவ வீரர்கள் சென்ற ரயில் தடம் புரண்டது: பீகாரில் பரபரப்பு