×

சாரி வகையை சேர்ந்த கொரோனா நோயாளி தகவல் அரசிடம் இல்லை

* பல்வேறு நோய்கள் இருப்பதால் இறப்பு அதிகரிக்கும்
* தனி கவனம் தேவை என நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதிக அறிகுறியுடன் உள்ளவர்கள் தொடர்பான தகவல் தமிழக அரசிடம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா தாண்டவம்  ஆடி வருகிறது.  கடந்த சில நாட்களாக தினசரி 900க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களில் கொரோனாவுடன் வேறு நோய்களுடன்  (சாரி வகையைச் ேசர்ந்தவர்கள்) உள்ளவர்கள் தொடர்பான தகவல் தமிழக அரசிடம் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: 38 டிகிரி செல்சியசுக்கு மேல் உடல் வெப்பநிலை உள்ள நபர்கள் மற்றும் 10 நாட்களுக்கு மேல் இருமல் அறிகுறி உள்ளவர்கள் சாரி வகையைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு இதைத்தவிர்த்து பல்வேறு நோய் பாதிப்பு இருக்கும். இவ்வாறு பல்வேறு பாதிப்புடன் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின்  உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்கு ெசன்று உயிரிழப்புகள் ஏற்படலாம்.  இதன்படி இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று ஐசிஎம்ஆர் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் தமிழகத்தில் இது போன்று பல்வேறு நோயுடன் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற தகவல் சுகாதாரத்துறையிடம் இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு  மட்டும் சோதனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதிக அறிகுறியுடன் பல்வேறு நோய் பாதிப்புடன் உள்ள முதியவர்கள் பலர் வீடுகளில் இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து கொரோனா சோதனை செய்ய வேண்டும். இல்லை என்றால் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பல மரணங்கள் அரசுக்கு தெரியாமல் போகவும் வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.


Tags : state , Corona Patient, Tamil Nadu
× RELATED நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே...